என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சென்னிமலை முருகன்"
- தார் சாலை பணி நடப்பதால் பக்தர்கள் இரு, நான்கு சக்கர வாகனங்களில் செல்ல பக்தர்களுக்கு அனுமதியில்லை.
- வெயிலுக்கு இதமாக இருப்பதாகவும் அதிக சூடுதாக்குவது இல்லை எனவும் பக்தர்கள் தெரிவித்தனர்.
சென்னிமலை:
சென்னிமலை முருகன் கோவிலில் தினமும் 6 கால பூஜைகள் நடக்கிறது. மேலும் தொடர்ந்து திருவிழா வந்து கொண்டுள்ளது. உள்ளூர், வெளியூர் பக்தர்கள் பள்ளி விடுமுறை தினம் ஆதலால் குழைந்தைகளுடன் வந்த பூஜைகளில் பங்கேற்று சாமி தரிசனம் செய்கின்றனர்.
தற்போது தார் சாலை பணி நடப்பதால் பக்தர்கள் இரு, நான்கு சக்கர வாகனங்களில் செல்ல பக்தர்களுக்கு அனுமதியில்லை. தற்போது குறிப்பிட்ட நேரத்திற்கு பஸ் மட்டும் செல்கிறது. புரட்டாசி மாதமாக இருந்தாலும், வெயில் தாக்கத்தில், சூடாகி நடக்க மிகவும் சிரமப்பட்டனர்.
மேலும் கோவில் பிரகாரத்திலும் நடைபாதை கற்கள் சூடாகி, பக்தர்களின் பாதங்களை பதம் பார்த்தது. இதனால் குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள் மிகவும் சிரமப்பட்டனர். இதையறிந்த கோவில் நிர்வாகம் வெயில் தாக்கத்தை கட்டுப்படுத்தும் அடர் வெள்ளை வர்ணம் அடித்துள்ளனர். இது வெயிலுக்கு இதமாக இருப்பதாகவும் அதிக சூடுதாக்குவது இல்லை எனவும் பக்தர்கள் தெரிவித்தனர்.
- ஸ்ரீலஸ்ரீ ராமநாதசிவாச்சாரியார் சிறப்பு பூஜை நடத்தினார்.
- பக்தர்கள் தேர் மீது உப்பு, மிளகு தூவி வணங்கினர்.
சென்னிமலை,
சென்னிமலை முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.இதையொட்டி நேற்று இரவு திருக்கல்யாணம் நடந்தது.
பின்பு இன்று அதிகாலை உற்சவருக்கு சிறப்பு அபிஷேகமும், வழிபாடும் நடந்தது. அதை தொடர்ந்து சாமி புறப்பாடு காலை 6.10 மணிக்கு நடைபெற்றது.
சாமி தேர் நிலையை மூன்று முறை வலம் வந்தது. தேர்நிலையில் வைக்கப்பட்டு தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநாதசிவாச்சாரியார் சிறப்பு பூஜை நடத்தினார். அதை தொடர்ந்து காலை 6.20 மணிக்கு தேர்வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் இழுத்தனர். அப்போது கூடியிருந்த பக்தர்கள் அரோகரா... அரோகரா... முருகனுக்கு அரோகரா... கந்தனுக்கு அரோகரா... என பக்தி கோஷங்களை எழுப்பினர்கள்.
பின்பு தேர் கிழக்கு, தெற்கு, மேற்கு, ரத வீதிகள் வழியாக வலம் வந்து வடக்கு வீதியில் நிறுத்தப்பட்டது. பக்தர்கள் தேர் மீது உப்பு, மிளகு தூவி வணங்கினர். பின்பு இன்று மாலை தேர்நிலை சேரும்.
தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். நாளை வியாழக்கிழமை காலை பரிவேட்டை நிகழ்ச்சியும். இரவு தெப்பத்தேர் நிகழ்ச்சியும் நடக்கிறது.
வெள்ளிக்கிழமை காலை 8மணிக்கு மகாதரிசன நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு மஞ்சள் நீர் அபிஷேகத்துடன் பங்குனி உத்திர விழா நிறைவு பெறுகிறது.
- திருத்தேரோட்டமும் அதேபோல் நகரின் நான்கு ரத வீதிகளில் தான் நடக்கும்.
- கோவில் பணியாளர்களுக்கு போலீஸ் நிலையத்தில் இனிப்பு, காரம், டீ கொடுத்து மாரியாதை செய்வார்கள்.
சென்னிமலை
சென்னிமலை முருகன் கோவிலில் விழாக்கள் அனைத்தும் சென்னிமலை டவுன் கிழக்கு ரத வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் தான் நடக்கும். திருத்தேரோட்டமும் அதேபோல் நகரின் நான்கு ரத வீதிகளில் தான் நடக்கும்.
சென்னிமலை முருகன் கோவில் தேரோட்டத்தில் தேர் நிலை சேர்ந்தவுடன் தேர் நிலையில் இருந்து சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்–இன்ஸ்பெக்டர்களுக்கு மாலை அணிவித்து மேள, தாளம் முழங்க கோவில் செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் தலைமையில் ஊர்வலமாக சென்னிமலை போலீஸ் நிலைய த்துக்கு அழைத்து சென்று விடுவார்கள்.
இந்த பழக்கம் பல நீண்ட வருடங்களாக உள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பாக தெரிவிக்கின்றனர். எந்த வி.ஐ.பி. கலந்து கொண்டா லும் சென்னிமலை போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர், சப்–இன்ஸ் பெக்டருக்கு தான் இங்கு மரியாதை.
மேலும், ஊர்வலமாக போலீஸ் நிலையம் செல்லும் தேரோட்டி, கோவில் பணியாளர்களுக்கு போலீஸ் நிலையத்தில் இனிப்பு, காரம், டீ கொடுத்து மாரியாதை செய்வார்கள்.
இது நடைமுறை என்பதை விட பழக்கம் என கூறலாம். 100 வருட ங்களுக்கு மேல் இந்த பாரம்பரிய மரியாதை தொடர்வதாக பெரியவ ர்கள் கூறு கிறார்கள். இந்த மரியாதை மாறாமல் இந்த ஆண்டும் நடைபெற்றது.
- சென்னிமலை மலை முருகன் கோவிலுக்கு செல்லக்கூடிய 2-வது கொண்டை ஊசி வளைவில் மண்சரிவு ஏற்பட்டு பெரிய கற்கள் ரோட்டில் கிடந்தது.
- இந்த மண்சரிவால் எவ்வித பாதிப்பும் இல்லை
சென்னிமலை:
சென்னிமலை பகுதியில் கடந்த 2 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்சமாக 99 மில்லி மீட்டர் அளவு சென்னிமலையில் மழை பதிவாகியிருந்தது.
இந்த நிலையில் சென்னிமலை மலை முருகன் கோவிலுக்கு செல்லக்கூடிய 2-வது கொண்டை ஊசி வளைவில் மண்சரிவு ஏற்பட்டு பெரிய கற்கள் ரோட்டில் கிடந்தது.
இது குறித்து அறிந்த கோவில் பணியாளர்கள் உடனடியாக செயல் அலுவலருக்கு தகவல் தெரிவித்து பொக்லைலன் எந்திரம் மூலம் ஒரு மணி நேரத்தில் மண்சரிவு கற்களை அகற்றினர்.
இந்த மண்சரிவால் எவ்வித பாதிப்பும் இல்லை. தொடர்ந்து இடைவிடாது மழை பெய்ததால் மண் சரிவு ஏற்பட்டு கற்கள் சரிந்துள்ளதாக தெரிகிறது.
- சென்னி மலை முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்றது. கும்பாபிஷேக 8-ம் ஆண்டு நிறைவு விழா நேற்று நடைபெற்றது.
- விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சென்னிமலை,
ஈரோடு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சென்னி மலை முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்றது. கும்பாபிஷேக 8-ம் ஆண்டு நிறைவு விழா நேற்று நடைபெற்றது.
இதையொட்டி நேற்று காலை 10 மணிக்கு கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கி சிறப்பு யாக வேள்வி பூஜைகள், பூர்ணாகுதியுடன் நிறைவடைந்தது.
இதை தொடர்ந்து பால், தயிர் உட்பட பல்வேறு திரவியங்கள் மூலம் சிறப்பு அபிேஷகம் சிறப்பு பூஜைகள் மூலவர், உற்சவருக்கு நடந்து. அப்போது சிறப்பு அலங்காரத்தில் சாமிகள் அருள் பாலித்தனர்.
பின்னர் உற்சவ–மூர்த்திகள் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- சென்னிமலை முருகன் கோவிலில் பிரசாத கடை ரூ. 15 லட்சத்து 50 ஆயிரத்திற்கு ஏலம் போனது. அதேபோல் மலை அடிவாரத்தில் உள்ள முடிகாணிக்கை செலுத்தும் இடத்தில் முடியினை சேகரித்து கொள்ள ஒரு வருடத்திற்கு ரூ.66 ஆயிரத்து 200 ஏலம் போனது.
- இதேபோல் மலை மீது பூக்கடை, தேங்காய், பழம் விற்பனை செய்யும் கடைகள், குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் ஏலம் குறைவாக கேட்டதால் ஏலம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சென்னிமலை:
ஈரோடு மாவட்டத்தின் புகழ் பெற்ற மலை கோவிலாக விளங்கும் சென்னிமலை முருகன் கோவிலுக்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து முருகப்பெ ருமானை வழிபட்டு செல்கி ன்றனர். இந்த கோவிலின் ஆண்டு வருமானம் ரூ.3 கோடியே 40 லட்சம் ஆகும்.
இந்நிலையில் சென்னிமலை மலை அடிவாரத்தில் உள்ள கோவில் அலுவலகத்தில் சென்னிமலை மலை மீதுள்ள முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதம் விற்பனை செய்து கொள்ளும் கடை ஒரு வருடத்திற்கு நடத்த தக்கார் அன்னகொடி, செயல் அலுவலர் அருள்குமார் தலைமையில் ஏலம் நடந்தது.
இதில் பிரசாத கடை ரூ. 15 லட்சத்து 50 ஆயிரத்திற்கு ஏலம் போனது. அதேபோல் மலை அடிவாரத்தில் உள்ள முடிகாணிக்கை செலுத்தும் இடத்தில் முடியினை சேகரித்து கொள்ள ஒரு வருடத்திற்கு ரூ.66 ஆயிரத்து 200 ஏலம் போனது.
இதேபோல் மலை மீது பூக்கடை, தேங்காய், பழம் விற்பனை செய்யும் கடைகள், குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் ஏலம் குறைவாக கேட்டதால் ஏலம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
- சென்னிமலை முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 12-ந் தேதி நடக்கிறது.
- ஊஞ்சலூர் அருகே காவிரி ஆற்றில் இருந்து சென்னிமலைக்கு தீர்த்தம் எடுத்து வரப்படுகிறது
- மாலை சந்தன காப்பு அலங்கா ரத்தில் மகா தீபாராதனை, சுவாமி புறப்பாடு நடக்கிறது.
சென்னிமலை:
சென்னிமலை முருகன் கோவிலில் முருக பெருமானின் அவதார தினமான வைகாசி விசாகத்தை முன்னிட்டு 66-வது ஆண்டு வைகாசி விசாக பெருவிழா வருகிற 12-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி வரும் 11-ந் தேதி மாலை ஊஞ்சலூர் அருகே காவிரி ஆற்றில் இருந்து சென்னிமலைக்கு தீர்த்தம் எடுத்து வரப்படு கிறது. தொடர்ந்து 12-ந் தேதி காலை 7.30 மணிக்கு சென்னிமலை கிழக்கு ராஜா வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க காவிரி திருமஞ்சன தீர்த்தம் ஊர்வலமாக புறப்பட்டு மலை கோவிலை சென்று அடைகிறது.
இதை தொடர்ந்து முருகன் கோவிலில் அன்று காலை கணபதி ேஹாமத்து டன் தொடங்கி கலசஸ்தா பனம், 108 சங்குஸ்தாபனம், ஜெபம், ஓமம் நடக்கிறது. மதியம் முருகப்பெருமானுக்கு பஞ்சாமிர்தம், தேன், பழங்கள், பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பொரு ட்களால் அபிேஷகம் செய்யப்படுகிறது. மாலை சந்தன காப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடக்கிறது. அதை தொடர்ந்து சுவாமி புறப்பாடு நடக்கிறது.
விழாவை யொட்டி வரும் 12-ந் தேதி காலை முதல் இரவு வரை மலை அடிவாரத்தில் உள்ள அருணகிரிநாதர் மடத்தில் அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அருள்குமார் தலைமையில் அருணகிரிநாதர் மடம் மற்றும் கிருத்திகை விசாக குழுவினர் செய்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்